search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    நடா புயல் எதிரொலி: அண்ணா, அம்பேத்கர் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து
    X

    நடா புயல் எதிரொலி: அண்ணா, அம்பேத்கர் பல்கலைக்கழக தேர்வுகள் ரத்து

    புயல் காரணமாக நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக அண்ணா மற்றும் அம்பேத்கர் பல்கலைக்கழகங்கள் அறிவித்துள்ளன.
    சென்னை:

    நாளை (2-ந்தேதி) அதிகாலை கடலூருக்கும், வேதாரண்யத்திற்கும் இடையே நடா புயல் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம்
    தெரிவித்துள்ளது. நடா புயல் உருவாகியுள்ளதால் நாகை, கடலூர்,
    புதுச்சேரி துறைமுகங்களில் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.

    இந்நிலையில் புயல் எச்சரிக்கையால் பொறியியல் கல்லூரிகளில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாகவும், ரத்து
    செய்யப்பட்ட தேர்வுக்கான மறுதேதி பின்னர் அறிவிக்கப்படும் என
    அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. இதுபோல அம்பேத்கர் சட்ட பல்கலைக்கழகத்தில் நடைபெறவிருந்த தேர்வுகளும் ஒத்தி
    வைக்கப்பட்டுள்ளன.

    மேலும், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில் நாளை நடைபெறவிருந்த தேர்வுகள் ரத்து செய்யப்படுவதாக பல்கலைக்கழக
    தாளாளர் தெரிவித்துள்ளார்.

    முன்னதாக நடா புயல் எச்சரிக்கையால் அண்ணா பல்கலைக்கழகத்தில் இன்று நடைபெறவிருந்த தேர்வுகளும் ரத்து செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
    Next Story
    ×