என் மலர்

  செய்திகள்

  பரமத்திவேலூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது
  X

  பரமத்திவேலூர் அருகே சூதாட்டத்தில் ஈடுபட்ட 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமத்திவேலூர் சுற்று வட்டார பகுதிகளில் இருவேறு இடங்களில் பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 9 பேரை போலீசார் கைது செய்தனர்.

  பரமத்திவேலூர்:

  பரமத்திவேலூர் காவிரி ஆற்றுப்பாலம் அருகில் பரமத்திவேலூர் போலீசார் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, காலை 11 மணியளவில் சிங்காரப்பாறை கருப்பண்ணார் கோவில்பின்புறம் உள்ள புதரின் மறைவில் சிலர் வட்டமாக அமர்ந்து பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தது கண்டு அனைவரிடமும் விசாரணை போலீசார் நடத்தினர்.

  விசாரணையில், அவர்கள் பரமத்திவேலூரை சேர்ந்த மதியழகன் (26), சதீஸ் குமார்(25), அருண் (33), வேல் முருகன் (32), சதீஸ்குமார் (32), ஆறுமுகம் (20) என்பது தெரியவந்தது.

  அதேபோல் பொத்தனூர் கிழக்கு வண்ணாந்துறை பகுதியில் சூதாட்டத்தில் ஈடுபட்டிருந்தனர். விசாரணையில் அவர்கள் பொத்தனூரை சேர்ந்த ராஜேந்திரன் (50), செந்தில் (38), பன்னீர் செல்வம் (53) என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து சூதாட்டத்தில் ஈடுபட்ட 9 பேரையும் பரமத்திவேலூர் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×