என் மலர்

  செய்திகள்

  அரசு ஊழியர்கள் பணம் எடுப்பதில் சிக்கல்: வங்கிகளுக்கு மேலும் நெருக்கடி
  X

  அரசு ஊழியர்கள் பணம் எடுப்பதில் சிக்கல்: வங்கிகளுக்கு மேலும் நெருக்கடி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வங்கிகளில் பணம் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருவதால் அரசு ஊழியர்கள் சம்பள பணத்தை எடுப்பதில் சிரமம் ஏற்படும் என்று தெரிகிறது.
  சென்னை:

  வங்கிகளில் பணம் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் இந்த மாதம் சம்பள பணத்தை எவ்வாறு பெறுவது என்ற குழப்பம் நிலவி வருகிறது.

  சம்பளத்தை ரொக்கமாக வழங்க வேண்டும் என்று அரசு ஊழியர்களின் பல்வேறு சங்கங்கள் கோரிக்கை வைத்த போதிலும் அதனை அரசு ஏற்கவில்லை.

  வழக்கம் போல் வங்கி கணக்குகளில் சம்பளம் செலுத்தப்படும் என்று தெரிவித்து உள்ளது. இது அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

  10 நாட்களுக்கு மேலாக பணம் தட்டுப்பாடு நிலவுவதால் பொதுமக்களுக்கு போதுமான பணம் வினியோகம் செய்யப்பட முடியவில்லை. பல வங்கிகள் முடங்கி உள்ளன.

  அரசு ஊழியர்களுக்கு நாளை (30-ந்தேதி) மாலை வங்கி கணக்குகளில் சம்பளம் செலுத்தப்படும்.

  இதனால் மாலையில் இருந்து அவர்கள் பணத்தை எடுக்க முயற்சிப்பார்கள். ஆனால் ஏ.டி.எம்.களில் அதிகப்பட்சமாக ரூ.2 ஆயிரம் எடுக்க வேண்டும் என்ற கட்டுப்பாடு உள்ளது.

  ஆனால் ஏ.டி.எம்.களும் அதிகளவில் செயல்படவில்லை. வங்கிகள் மூலமாக மட்டும்தான் அதிகபட்சமாக பணம் எடுக்கும் நிலை உள்ளது.

  வங்கிகளில் பணம் தட்டுப்பாடு தொடர்ந்து நீடித்து வருவதால் அரசு ஊழியர்களுக்கு சம்பள பணத்தை எடுப்பதில் சிரமம் ஏற்படும் என்று தெரிகிறது.

  ரிசர்வ் வங்கியில் இருந்து நாளை அனைத்து வங்கிகள், ஏ.டி.எம்.களுக்கு முழுமையாக பணம் சென்றால் மட்டுமே அரசு ஊழியர்கள் தாராளமாக பணம் எடுக்க முடியும். வீட்டு வாடகை, பால், மளிகை பொருட்கள், மருத்துவ செலவு போன்ற அத்தியாவசிய தேவைகளை முதல் வாரத்தில் பூர்த்தி செய்ய முடியாத நிலை உள்ளது.

  வங்கிகளில் பணம் எடுக்க உச்சவரம்பை தளர்த்திய போதிலும் பணம் இல்லாத காரணத்தால் தேவையான அளவுக்கு பணம் எடுப்பதில சிக்கலும், சிரமமும் ஏற்படும் என தெரிகிறது.

  தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் தொகுப்பு ஊதியம் பெறுபவர்கள், ஓய்வூதியதாரர்கள் என மொத்தம் 18 லட்சம் பேர் உள்ளனர்.

  இவர்களின் தேவையை வங்கிகள் எவ்வாறு பூர்த்தி செய்ய போகிறது என்பது கேள்விக்குறியாக உள்ளது.
  Next Story
  ×