என் மலர்

  செய்திகள்

  ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனர் அடித்துக்கொலை: சொத்து தகராறில் உறவினர் வெறிச்செயல்
  X

  ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனர் அடித்துக்கொலை: சொத்து தகராறில் உறவினர் வெறிச்செயல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  நாசரேத்தில் சொத்து தகராறில் ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனரை கொலை செய்த உறவினரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  நாசரேத்:

  நாசரேத் சர்ச் தெருவை சேர்ந்தவர் ஜூலியன் சாம் நாயகம் (வயது59). இவர் ஓய்வு பெற்ற உடற்கல்வி இயக்குனர். இவருக்கு அப்பகுதியில் ஒரு தோட்டம் உள்ளது.

  ஜூலியன் சாம் நாயகத்தின் உறவினரான அதே பகுதியை சேர்ந்த ஏசாராஜா (65) தனக்கும் அந்த தோட்டத்தில் பங்கு உள்ளது என கூறி வந்துள்ளார். இதனால் அவர்கள் இருவருக்கும் இடையே கடந்த சில வருடங்களாக முன்விரோதம் இருந்து வந்தது. இது தொடர்பாக கோர்ட்டிலும் வழக்கு நடந்து வருகிறது.

  இந்நிலையில் இன்று காலை ஏசாராஜா, ஜூலியன் சாம் நாயகம் தோட்டத்திற்கு சென்று அங்குள்ள பூட்டை உடைத்து உள்ளே சென்றார். அப்போது அங்கு வந்த ஜூலியன் சாம் நாயகம் எனது தோட்டத்திற்குள் எப்படி நுழையலாம் என கூறி ஏசாராஜாவை தனது செல்போன் மூலம் போட்டோ எடுத்தார்.

  இதனால் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. வாக்குவாதம் முற்றியதில் ஆத்திரம் அடைந்த ஏசாராஜா அருகே கிடந்த இரும்பு கம்பியால் ஜூலியன் சாம் நாயகத்தின் தலையில் அடித்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை அக்கம் பக்கத்தினர் மீட்டு நாசரேத் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவரை பரிசோதித்த டாக்டர்கள் ஜூலியன் சாம்நாயகம் ஏற்கனவே இறந்து விட்டார் என கூறினர்.

  இதையடுத்து நாசரேத் போலீசார் விரைந்து வந்து உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக சாத்தான்குளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இச்சம்பவம் குறித்து போலீ சார் வழக்குப்பதிவு செய்து ஏசாராஜாவை கைது செய்து விசாரணை நடத்தி வருகின் றனர். * * * கொலை செய்யப்பட்ட ஜூலியன் சாம் நாயகம்

  Next Story
  ×