என் மலர்

  செய்திகள்

  முதுகுளத்தூர் அருகே ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது
  X

  முதுகுளத்தூர் அருகே ஆயுதங்களுடன் கல்லூரி மாணவர் உள்பட 4 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  முதுகுளத்தூர் அருகே ஆயுதங்களுடன் சுற்றிதிரிந்த கல்லூரி மாணவர் உள்பட 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

  ராமநாதபுரம்:

  ராமநாதபுரம் மாவட்டம் முதுகுளத்தூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் நேற்று இரவு செல்வநாயகபுரம் விலக்கு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டு கொண்டிருந்தனர்.

  அப்போது அந்த வழி யாக 2 மோட்டார் சைக் கிளில் வந்த 4 வாலிபர் களை மறித்து போலீசார் விசாரணை மேற்கொண் டனர். ஆனால் அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தனர். இதை யடுத்து மோட்டார் சைக் கிளை சோதனையிட்ட போது அதில் 69 செ.மீ. நீளமுள்ள கூர்வாளும், 1½ அடி அரிவாளும் இருந்தது.

  உடனே போலீசார் 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். அங்கு இன்ஸ் பெக்டர் ராமகிருஷ்ணன் நடத்திய விசாரணை யில் மேலத்தூவலை சேர்ந்த வேல்முருகன் (வயது20), மூவேந்திரன் (24), காளீஸ்வரன் (20), ஆனந்த் (19) எனவும் சிலரி டம் தகராறு செய்யும் நோக்கத்தில் ஆயுதங்களு டன் சென்றதும் தெரிய வந்தது.

  இதையடுத்து போலீசார் 4 பேரையும் கைது செய்தனர். கைதான வேல்முருகன் பரமக்குடியில் உள்ள ஒரு கல்லூரியில் படித்து வருகிறார் என்பது குறிப் பிடத்தக்கது.

  Next Story
  ×