என் மலர்

  செய்திகள்

  ராசிபுரத்தில் பணம் வைத்து சூதாட்டம் 3 பேர் கைது
  X

  ராசிபுரத்தில் பணம் வைத்து சூதாட்டம் 3 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராசிபுரத்தில் பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

  ராசிபுரம்:

  ராசிபுரம் டவுன் தீயணைப்பு நிலையம் பின்புறம் உள்ள மயானத்தில் சிலர் பணம் வைத்து சூதாட்டம் ஆடிக்கொண்டிருப்பதாக ராசிபுரம் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

  அதன் பேரில் ராசிபுரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கோபிநாத் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.

  அப்போது அங்கு பணம் வைத்து சூதாடிக்கொண்டிருந்த ராசிபுரம் வீட்டு வசதி வாரிய குடியிருப்பு பகுதியைச் சேர்ந்த ஆறுமுகம் (வயது 42), கிழக்குத் தெருவைச் சேர்ந்த சந்தோஷ் (36), மற்றும் பச்சமுத்து (36) ஆகிய 3 பேர்களை போலீசார் கைது செய்தனர்.

  Next Story
  ×