என் மலர்

  செய்திகள்

  மாவோயிஸ்டுகள் பதுங்கல்: கொடைக்கானல் மலை கிராமங்களில் போலீசார் தேடுதல் வேட்டை
  X

  மாவோயிஸ்டுகள் பதுங்கல்: கொடைக்கானல் மலை கிராமங்களில் போலீசார் தேடுதல் வேட்டை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கொடைக்கானல் வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் தங்கி உள்ளனரா என போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.
  பெரும்பாறை:

  கேரள வனப்பகுதியில் அம்மாநில போலீசாருக்கம் மாவோயிஸ்டுகளுக்கும் நடந்த சண்டையில் 2 மாவோயிஸ்டுகள் சுட்டுக் கொல்லப்பட்டனர். 10-க்கும் மேற்பட்டோர் தப்பிவிட்டனர். இவர்கள் தமிழக எல்லை மற்றும் அடர்ந்த வனப்பகுதியில் தஞ்சமடைய வாய்ப்புள்ளதாக கருதிய போலீசார் அவர்களை தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

  கொடைக்கானல் அருகில் உள்ள வடகவுஞ்சி மற்றும் பெரும்பள்ளம் இடையே பொய்யாவழி வனப்பகுதி உள்ளது. இங்கு கடந்த 2008-ம் ஆண்டு மாவோயிஸ்டுகள் ஆயுத பயிற்சியில் ஈடுபட்டு வந்தபோது நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் அவர்களை பிடிக்க முயன்றனர். இதில் நவீன் பிரசாத் என்பவன் சுட்டுக்கொல்லப்பட்டான். அவர்களுடன் தங்கியிருந்த மாவோயிஸ்டுகள் பலர் தமிழகத்தின் பல பகுதிக்கு தப்பியோடினர்.

  இந்நிலையில் கொடைக்கானலை ஒட்டியுள்ள வனப்பகுதியில் மாவோயிஸ்டுகள் தங்கி உள்ளனரா? என தீவிர தேடுதல் வேட்டை நடத்தப்பட்டு வருகிறது. நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் கொடைக்கானல் மலை கிராமங்களான தாண்டிக்குடி, பொய்யாவழி, பண்ணைக்காடு, பாலமலை, மூலையார், செம்பராங்குளம் ஆகிய பகுதிகளில் தேடுதல் வேட்டை நடத்தினர்.

  வனப்பகுதியில் உள்ள கிராம மக்களை மூளைச்சலவை செய்து பதுங்கி இருப்பதற்கான வாய்ப்புகள் இருக்கலாம் என்ற கோணத்தில் அவர்கள் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.

  உயர் அதிகாரிகள் உத்தரவு வரும்வரை தேடுதல் வேட்டை தொடர்ந்து நடைபெறும் என போலீசார் தெரிவித்தனர்.
  Next Story
  ×