என் மலர்

  செய்திகள்

  திருவள்ளூர் மாவட்டத்தில் ரே‌ஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கும் பணி: கலெக்டர் உத்தரவு
  X

  திருவள்ளூர் மாவட்டத்தில் ரே‌ஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கும் பணி: கலெக்டர் உத்தரவு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் மாவட்டத்தில் வீடு வீடாக சென்று ரே‌ஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கும் பணியை கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

  பொன்னேரி:

  தமிழகத்தில் ரே‌ஷன் கார்டுடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் இணைக்கும் பணி நடந்து வருகிறது.

  பொது மக்கள் ரே‌ஷன் கடைக்கு சென்று ஆதார் எண்ணை பதிவு செய்து வருகிறார்கள். இந்தப்பணி முழுவதும் முடிந்ததும் ‘ஸ்மார்ட்’ ரே‌ஷன் கார்டு வழங்கப்பட உள்ளது.

  திருவள்ளூர் மாவட்டத்தில் மொத்தம் 5 லட்சத்து 76 ஆயிரத்து 245 குடும்ப அட்டைகள் உள்ளன. இவர்களுக்கு 1120 ரே‌ஷன் கடைகள் மூலம் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது.

  இதில் ரே‌ஷன் கார்டுடன், ஆதார் எண், செல்போன் எண் இணைக்கும்பணி 56 சதவீதம் மட்டும் முடிவடைந்துள்ளது.

  அனைத்து ரே‌ஷன் கார்டுடனும், ஆதார் எண்ணை இணைக்கும் பணி முழு வீச்சில் நடந்து வருகிறது.

  இதைத் தொடர்ந்து வீடு வீடாக சென்று பணியை மேற்கொள்ள மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி உத்தரவிட்டுள்ளார்.

  இதையடுத்து திருவள்ளூர் மாவட்டத்தில் அனைத்து ரே‌ஷன் கடை ஊழியர்களும் தங்களது பகுதியில் உள்ள வீடுகளுக்கு நேரடியாக சென்று ரே‌ஷன் கார்டுடன் குடும்ப உறுப்பினர்களின் ஆதார் எண் மற்றும் செல்போன் எண்ணை பதிவு செய்தனர்.

  பொன்னேரியை அடுத்த கிருஷ்ணாவரத்தில் நடந்த இந்த பணியை கலெக்டர் சுந்தரவல்லி ஆய்வு செய்தார். அப்போது அனைத்து ரே‌ஷன் கார்டுடனும் ஆதார் எண்ணை இணைக்கும் பணியை விரைந்து முடிக்க ஊழியர்களுக்கு உத்தரவிட்டார்.

  ஆய்வின் போது சார் ஆட்சியர் தண்டபாணி, வட்டாட்சியர் செந்தில்நாதன், தனி வட்டாட்சியர் தமிழ்செல்வன், வட்ட வழங்கல் அதிகாரி வெங்கடேஷ் ஆகியோர் உடன் இருந்தனர்.

  இது குறித்து வட்ட வழங்கல் அதிகாரி வெங்கடேஷ் கூறும்போது, பொன்னேரி தாலுக்காவில் 252 ரே‌ஷன் கடைகள் மூலம் பொருட்கள் வினியோகிக்கப்படுகிறது. தற்போது வீடு, வீடாக சென்று ரே‌ஷன் கார்டுடன் ஆதார் எண் இணைக்கும் பணி நடைபெற்று வருகிறது. பொன்னேரி தாலுக்காவில் 59 சதவீதம் பணி முடிந்து உள்ளது.

  இதனால் போலி ரே‌ஷன் கார்டுகள் முற்றிலும் ஒழிக்கப்படும். விரைவில் ஸ்மார்ட் ரே‌ஷன் கார்டு வழங்கப்பட உள்ளது என்றார்.

  Next Story
  ×