என் மலர்

  செய்திகள்

  தேன்கனிக்கோட்டை அருகே ஒரு தலை காதலால் இரு தரப்பினர் மோதல்
  X

  தேன்கனிக்கோட்டை அருகே ஒரு தலை காதலால் இரு தரப்பினர் மோதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தேன்கனிக்கோட்டை அருகே ஒரு தலை காதலால் இரு தரப்பினர் மோதிக்கொண்டனர். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி 5 பேரை கைது செய்தனர்.

  தேன்கனிக்கோட்டை:

  கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை சூள குண்டா கிராமத்தை சேர்ந்தவர் ராஜகோபாலச்சாரி. இவரது மகன்கள் லோகேஷ் (வயது 33), சதீஷ்(30).

  அதே பகுதியை சேர்ந்த காந்தராஜின் (23) நண்பர் முனிராஜ் சூளகுண்டா கிராமத்தை சேர்ந்த ஒரு பெண்ணை ஒருதலை பட்சமாக காதலித்து வந்தார். அந்த பெண்ணுக்கு வேறு ஒருவருடன் திருமணம் செய்து வைக்க முடிவு செய்யப்பட்டிருந்தது.

  இதை அறிந்த முனிராஜ் நண்பர் காந்தராஜிடம் காதலுக்கு உதவும்படி கேட்டுள்ளார். அதன்படி, இருவரும் அந்த பெண் தங்கியிருக்கும் உறவினர் வீட்டிற்கு சென்று தகராறில் ஈடுபட்டனர். இதை கேள்விப்பட்ட லோகேஷ், சதீஷ் மற்றும் அவரது நண்பர்கள் 10 பேர் அங்கு வந்தனர்.

  பின்னர் 2 தரப்பினரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி தாக்கினார்கள். இதில் காந்தராஜ் காயம் அடைந்தார். இவர் இது பற்றி தளி போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். புகாரின் பேரில் அவரை தாக்கியதாக சதீஷ், லோகேஷ், மஞ்சுநாத்(25), ரமேஷ்(28), குட்டண்ணா(50) ஆகிய 5 பேர் கைது செய்யப்பட்டனர். மற்றவர்களை தேடி வருகிறார்கள்.

  Next Story
  ×