என் மலர்

  செய்திகள்

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை
  X

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கூலித்தொழிலாளி தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வயிற்று வலியால் அவதிப்பட்ட கூலித்தொழிலாளி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  ஸ்ரீவில்லிபுத்தூர்:

  ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள ராமகிருஷ்ணாபுரம் புதூர் காலனி மேலத் தெருவை சேர்ந்தவர் கோவிந்தன் (வயது 66). கூலி தொழிலாளி.

  இவர் நீண்ட காலமாக வயிற்று வலியால் அவதிப்பட்டு வந்துள்ளார். இதில் மனம் உடைந்த கோவிந்தன் சாக முடிவு செய்து ஆறு, ஏழுமுறை தற்கொலைக்கு முயன்றார். அதை அவரது மனைவி முப்பிடாதி தடுத்து காப்பாற்றி வந்தார்.

  சம்பவத்தன்று மனைவி கடைக்கு சென்ற சமயத்தில் கோவிந்தன் வீட்டில் தூக்கில் தொங்கினார். வீடு திரும்பிய முப்பிடாதி, கணவர் உயிருக்கு போராடி கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அக்கம் பக்கத்தினர் உதவியுடன் அவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.

  அங்கு கோவிந்தனின் நிலைமை கவலைக்கிடமாகவே, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். எனினும் அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

  இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார், வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×