என் மலர்

  செய்திகள்

  அனைத்து வங்கிகளிலும் ஆதார் அட்டை இணைப்பு சிறப்பு முகாம்
  X

  அனைத்து வங்கிகளிலும் ஆதார் அட்டை இணைப்பு சிறப்பு முகாம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அனைத்து வங்கிகளிலும் ஆதார் அட்டை இணைப்பு மற்றும் ரூபே கார்டு விநியோகம் செய்வதற்காக வரும் 28-ம் தேதி முதல் டிசம்பர் 2-ம் தேதி வரை சிறப்பு முகாம் நடத்தப்படுகிறது.
  சென்னை:

  தமிழ்நாடு மாநில வங்கியாளர் குழு வரும் 28 நவம்பர் முதல் 2 டிசம்பர் வரை ஆதார் அட்டை இணைப்பு மற்றும் ரூபே கார்டு விநியோகம் செய்ய சிறப்பு முகாம் நடத்த கேட்டுக் கொண்டுள்ளது. அதனை தொடர்ந்து சென்னை மாவட்டத்தில் வங்கிகளின் ஒருங்கிணைப்பு குழுத்தலைவரான சென்னை மாவட்ட ஆட்சித் தலைவர், ஒவ்வொரு வங்கி கிளையிலும் சிறப்பு முகாம் நடத்த உத்தரவிட்டுள்ளார்.

  மேற்கண்ட சிறப்பு முகாம் நாட்களில் நவம்பர் 28  முதல்  டிசம்பர் 2 வரை வாடிக்கையாளர், பொதுமக்கள் ஆகியோர் ஆதார் அட்டை எண் மற்றும் கைபேசி எண்ணை வங்கி கணக்குடன் இணைத்துக் கொள்ள விண்ணப்பம் அளிக்கலாம். மேலும் ஜன்தன் கணக்குகளில் விநியோகிக்கப்படாமல் உள்ள ரூபே கார்டுகளை வாடிக்கையாளர்கள் பெற்றுக் கொள்ளலாம். மேலும் தொழிலாளர்கள் புதிய ஜன்தன் சேமிப்பு கணக்குகளை துவங்க விண்ணப்பங்கள் வழங்க இச்சிறப்பு முகாமில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதற்கான சிறப்பு ஏற்பாடு வங்கி கிளைகளின் மேலாளர்களால் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.

  எனவே ஒவ்வொரு வங்கிக் கிளையிலும் நடைபெறும் இச்சிறப்பு முகாம் வாய்ப்பினை பயன்படுத்தி ஆதார் எண் இணைப்பு மற்றும் கைபேசி எண் இணைப்பு, ரூபே கார்டுகள் விநியோகம் மற்றும் ஐன்தன் சேமிப்பு கணக்கு தொடங்குதல் ஆகிய அனைத்து வசதிகளையும் இச்சிறப்பு முகாம் மூலம் பொதுமக்கள் பெற்று பயனடைய சென்னை மாவட்ட ஆட்சித்தலைவர் ப.மகேஸ்வரி கேட்டுக்கொண்டுள்ளார்.
  Next Story
  ×