என் மலர்

  செய்திகள்

  9-ம் வகுப்பு மாணவியை கற்பழிக்க முயன்ற மினி லாரி டிரைவர் கைது
  X

  9-ம் வகுப்பு மாணவியை கற்பழிக்க முயன்ற மினி லாரி டிரைவர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேரன்மகாதேவி அருகே 9-ம் வகுப்பு மாணவியை கற்பழிக்க முயன்ற மினி லாரி டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

  நெல்லை:

  நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவி அருகே உள்ள சுப்பிரமணியபுரத்தை சேர்ந்தவர் நாகராஜ். இவரது மகன் சுரேஷ்குமார் (வயது26). இவர் மினி லாரி டிரைவராக வேலை பார்த்து வந்தார்.

  இவர் அந்த பகுதியை சேர்ந்த 9-ம் வகுப்பு மாணவி லட்சுமி (14), (பெயர் மாற்றப்பட்டுள்ளது) அடிக்கடி மாணவி பின்னால் சென்று காதல் வசனம் பேசியுள்ளார். ஆனால் மாணவி லட்சுமி இதை கண்டு கொள்ளவில்லை.

  இந்த நிலையில் கடந்த 23-ந்தேதி பள்ளி முடிந்து தனியாக வந்த மாணவியை வீட்டில் விடுவதாக சொல்லி தனது மினி லாரியில் சுரேஷ்குமார் ஏற்றினார். ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் மினி லாரியை நிறுத்தி மாணவி லட்சுமியை சுரேஷ்குமார் கற்பழிக்க முயன்றார். இதற்கு இடம் கொடுக்காத லட்சுமி கத்தி கூச்சல் போட்டார். அப்போது அங்கு ஆட்கள் வரவே சுரேஷ்குமார், மாணவியை விட்டு விட்டு தப்பி ஓடிவிட்டார்.

  இதுகுறித்து மாணவி லட்சுமி, அம்பை அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் முத்துலட்சுமி வழக்குப்பதிவு செய்து தப்பி ஓடிய சுரேஷ்குமாரை கைது செய்தார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

  Next Story
  ×