என் மலர்

  செய்திகள்

  ஆண்டிப்பட்டி அருகே பிரபல மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது
  X

  ஆண்டிப்பட்டி அருகே பிரபல மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ஆண்டிப்பட்டி அருகே பிரபல மோட்டார் சைக்கிள் கொள்ளையன் கைதானான்.

  ஆண்டிப்பட்டி:

  தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே உள்ள கொத்தப்பட்டியை சேர்ந்தவர் முருகேசன். (வயது 44). இவர் கதிர்நரசிங்கபுரம் கரூர் வைஸ்யா வங்கியில் பணம் எடுக்க விலை உயர்ந்த மோட்டார் சைக்கிளில் சென்றார். வங்கி முன்பு மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு பணம் எடுத்தார். பின்னர் திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை.

  அதிர்ச்சி அடைந்த அவர் பல இடங்களில் தேடி பார்த்தும் காணாததால் இது குறித்து ராஜதானி போலீசில் புகார்செய்தார். போலீசார் அனைத்து இடங்களுக்கும் தகவல் தெரிவித்து தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது ஒருவர் விலை உயர்ந்த மோட்டார் சைக்களில் சென்றார்.

  சந்தேகம் அடைந்த போலீசார் அவரை மடக்கி பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த மோட்டார் சைக்கிள் திருடி வந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அவரை போலீசார் கைது செய்தனர்.

  விசாரித்து பார்த்ததில் அவரது பெயர் கோட்டைச்சாமி. காமாட்சிபுரத்தை சேர்ந்த இவர் பல்வேறு இடங்களில் மோட்டார் சைக்கிள்களை திருடி உள்ளார். அவரிடம் இருந்து மேலும் ஒரு பைக் பறிமுதல் செய்யப்பட்டது.

  Next Story
  ×