என் மலர்

  செய்திகள்

  சேத்தூரில் பஸ் மோதி தொழிலாளி பலி
  X

  சேத்தூரில் பஸ் மோதி தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேத்தூரில் பஸ் மோதி தொழிலாளி பலியானார். டிரைவரை போலீசார் கைது செய்தனர்.

  ராஜபாளையம்:

  ராஜபாளையம் அருகே சேத்தூர் பைரவர் கோவில் தெருவை சேர்ந்தவர் பழனிசாமி (வயது 48) விவசாய கூலி தொழிலாளி.

  இவர் மொகவூர் என்ற ஊரில் இருந்து சேத்தூருக்கு சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அசையா மணி விலக்கு அருகே சென்று கொண்டிருந்த போது ராஜபாளையத்தில் இருந்து தென்காசிக்கு சென்று கொண்டிருந்த தனியார் பஸ் சைக்கிளில் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட பழனிசாமி அதே இடத்தில் பலியானார்.

  இதுபற்றிய தகவல் கிடைத்ததும் தளவாய்புரம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். விபத்து குறித்து இன்ஸ்பெக்டர் ராஜாமணி வழக்குப்பதிவு செய்து பஸ் டிரைவர் செல்வத்தை (42) கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

  Next Story
  ×