search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    அரியமங்கலம் குப்பை கிடங்கை இடம் மாற்றம் செய்யக்கோரி தர்ணா போராட்டம்
    X

    அரியமங்கலம் குப்பை கிடங்கை இடம் மாற்றம் செய்யக்கோரி தர்ணா போராட்டம்

    அரியமங்கலம் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி மாநகராட்சி கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு தர்ணா போராட்டம் நடந்தது.
    திருச்சி அரியமங்கலத்தில் மாநகராட்சி குப்பை கிடங்கு உள்ளது. இங்கு திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சேகரிக்கப்படும் குப்பைகள் நாளொன்றுக்கு 400 டன் அளவுக்கு கொட்டப்படுகிறது. அரியமங்கலம் குப்பை கிடங்கினால் அந்த பகுதி முழுவதும் நிலம், நீர், காற்று மாசுபடுவதாகவும், இதனால் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் பாதிக்கப்படுவதாகவும், அரியமங்கலம் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி பா.ஜனதா கட்சி மாவட்ட செயலாளரும், சுற்றுப்புறச்சூழல் பாதுகாப்பு பேரவை தலைவருமான சரவணன் தலைமையில் அந்த அமைப்பினர் நேற்று பகல் மாநகராட்சி அரியமங்கலம் கோட்ட அலுவலகத்தை முற்றுகையிட்டு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    அப்போது அவர்கள் அரியமங்கலம் குப்பை கிடங்கை இடமாற்றம் செய்யக்கோரி கோஷம் எழுப்பினார்கள்.

    தகவல் அறிந்த பாலக்கரை போலீஸ் இன்ஸ்பெக்டர் பெரியசாமி மற்றும் மாநகராட்சி நிர்வாக பொறியாளர் செல்வம், உதவி ஆணையர் பத்மாவதி மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் அங்கு சென்று அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்போது “மாநகராட்சிக்குட்பட்ட 16 இடங்களில் நுண்உரம் திடக்கழிவு செயலாக்க மையம் அமைக்கப்பட்டு வருவதாகவும், இதனால் அரியமங்கலத்தில் சேகரிக்கப்படும் குப்பைகளை தரம் பிரித்து பல்வேறு இடங்களில் உரம் தயாரிப்பதால் அங்கு கொட்டப்பட்டுள்ள குப்பைகளின் கொள்ளளவு குறையும்“ என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ஆனால் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் இதில் விரைந்து நடவடிக்கை எடுக்காவிட்டால் தொடர் போராட்டம் நடத்தப்படும் என்றும், மாநகராட்சி கமிஷனரிடம் மனு அளிக்க உள்ளோம் என்றும் கூறி அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இந்த சம்பவத்தால் அங்கு சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
    Next Story
    ×