என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
தூத்துக்குடியில் தூக்குப்போட்டு வாலிபர் தற்கொலை
முள்ளக்காடு:
தூத்துக்குடி முத்தையாபுரம் சூசைநகரை சேர்ந்தவர் கோயில்ராஜ். கூலித்தொழிலாளி. இவருக்கு மனைவி மற்றும் 4 மகள்களும் ஜெயக்குமார் (வயது 21) என்ற மகனும் இருந்தனர். குடிப்பழக்கம் உடைய கோயில்ராஜ் அடிக்கடி குடிபோதையில் வீட்டிற்கு வந்தார். இதனை அவரது மகன் ஜெயக்குமார் கண்டித்து வந்ததாக கூறப்படுகிறது.
இந்நிலையில் நேற்றும் கோயில்ராஜ் வீட்டிற்கு வந்த போது குடிபோதையில் வந்தார். இதனை பார்த்த ஜெயக்குமார் தனது தந்தை குடிப்பழக்கத்தை கைவிடாமல் மீண்டும் மீண்டும் குடித்து வருவதால் மனமுடைந்தார். நேற்று நள்ளிரவில் வாழ்க்கையில் வெறுப்படைந்த ஜெயக்குமார் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இது குறித்து தகவலறிந்த முத்தையாபுரம் போலீசார் விரைந்து வந்து ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.