search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மாவோயிஸ்டுகள் ஊடுருவியதாக தகவல் தமிழக-கேரள எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு
    X

    மாவோயிஸ்டுகள் ஊடுருவியதாக தகவல் தமிழக-கேரள எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு

    மாவோயிஸ்டுகள் ஊடுருவியதாக தகவலையடுத்து தமிழக-கேரள எல்லையில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு போடப்பட்டுள்ளது.
    கவுண்டம்பாளையம்:

    கோவை மாங்கரை அடுத்துள்ள ஆனைகட்டி மலைப்பகுதியை தொடர்ந்து கேரளா மாநிலம் அட்டப்பாடி கிராமம் வருகிறது. இங்கு மாவோயிஸ்டுகள் நடமாட்டம் இருப்பதாலும் அங்கு அவ்வப்போது ஏதாவது அசம்பாவிதம் நடைபெற்றும் வருகின்றன. இந்த நிலையில் தமிழக - கேரள எல்லையொட்டிய பகுதிகளில் மாவோயிஸ்டுகள் ஊடுருவியதாக தகவல் வந்தது.

    அதனால் கோவை - கேரளா எல்லை பகுதிகளான ஆனைகட்டி, மாங்கரை பகுதிகளில் தமிழக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கோவையில் இருந்து கேரளா செல்லும் வாகனங்களையும், கேரளாவில் இருந்து கோவைக்கு வரும் வாகனங்களையும் தீவிர சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

    அதுவும் தமிழக காவல் துறையினர் கேரள பதிவு எண் கொண்ட வாகனங்களை நிறுத்தி சோதனை செய்து வருகின்றனர். மேலும் அங்கு தேடப்பட்டு வரும் மாவோயிஸ்டுகள் படங்கள் வைக்கப்பட்டுள்ளன.

    அவர்கள் குறித்து தகவல் யாருக்காவது தெரிந்தால் உடனடியாக துடியலூர் போலீஸ் நிலையத்திற்கோ அல்லது மாவட்ட போலீசுகோ தகவல் தரவேண்டியும் அதில் அச்சிடப்பட்டுள்ளது.

    இதனால் இந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
    Next Story
    ×