என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
பெரியநாயக்கன்பாளையத்தில் காதல் திருமணம் செய்த இளம்பெண் தற்கொலை
கவுண்டம்பாளையம்:
கோவை பெரிய நாயக்கன் பாளையம் அருகே உள்ள வீரபாண்டி பகுதியை சேர்ந்தவர் மகேந்திரன். கூலி தொழிலாளி.
இவரது மனைவி மஞ்சு பிரியா(வயது 26). இவர்கள் காதலித்து கடந்த 9 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஜவகர்(6) என்ற மகன் உள்ளார்.
கடந்த 1 மாதத்திற்கு முன்பு மகேந்திரன் தாத்தா பொன்னுசாமி என்பவர் கீழே விழுந்து காயமடைந்துள்ளார். அவரை கோவை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அப்போது மகேந்திரன் தனது மனைவியிடம், ஆஸ்பத்திரியில் உடன் இருந்து தாத்தாவை பார்த்துக் கொள்ளுமாறு கூறி உள்ளார். அதற்கு மஞ்சு பிரியா மறுப்பு தெரிவித்தார்.
இதனால் கணவன், மனைவிக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. மஞ்சு பிரியா தனது பெற்றோர் வீட்டுக்கு சென்றார். அங்கு மனமுடைந்த நிலையில் காணப்பட்ட அவர் நேற்று முன்தினம் இரவு விஷம் குடித்த நிலையில் மயங்கி விழுந்தார். குடும்பத்தினர் அவரை மீட்டு அப்பகுதியில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. எனினும் சிகிச்சை பலனின்றி நேற்று அவர் இறந்தார்.
இதுகுறித்த புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.