என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
ராஜபாளையத்தில் மது-புகையிலை விற்ற 4 பேர் கைது
ராஜபாளையம்:
ராஜபாளையம் தெற்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி மற்றும் போலீசார் தென்காசி மெயின்ரோடு பகுதியில் ரோந்து சென்றனர். அப்போது ஒரு கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பது தெரியவந்தது.
அதனை பறிமுதல் செய்த போலீசார் கடையில் இருந்த முரளி (வயது40) என்பவரை கைது செய்தனர்.
இதேபோல் சப்-இன்ஸ்பெக்டர் நாகராஜ் தலைமையில் ரோந்து சென்ற போலீசார் சம்சிகாபுரம் பகுதியில் புகையிலை விற்றதாக லட்சுமணன் (56) என்பவரை கைது செய்தனர்.
மேலும் சம்சிகாபுரம் ஊரணி அருகே திருட்டுத்தனமாக அனுமதியின்றி மது விற்ற மாசாணம் (56) என்பவரையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 6 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.
ராஜபாளையம் வடக்கு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் அருண்பாண்டியன் பழைய பஸ் நிலைய பகுதியில் உள்ள ஊரணிபட்டி தெருவில் ரோந்து சென்றபோது திருட்டுத்தனமாக மதுவிற்ற சந்திரகுமார் (58) என்பவரை கைது செய்தார். அவரிடம் இருந்து 7 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.