search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    வங்கியில் துளை போட்ட இடம்.
    X
    வங்கியில் துளை போட்ட இடம்.

    சென்னை அண்ணாசாலை மைசூர் வங்கியில் கொள்ளை முயற்சி

    சென்னை அண்ணாசாலையில் உள்ள மைசூர் வங்கியில் நடந்த கொள்ளை முயற்சியில் லாக்கரை உடைக்க முடியாததால் ரூ.9 கோடி பணம் தப்பியது. இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    சென்னை:

    சென்னை அண்ணா சாலையில் உள்ள ஒயிட்ஸ் ரோட்டில் ஸ்டேட் பாங்க் ஆப் மைசூர் கிளை உள்ளது.

    இந்த வங்கி 2 மாடிகளை கொண்டது. இதன் கீழ் தளத்தில் ஏ.சி. பயன் படுத்தப்பட்டு இருந்தது. ஏ.சி. எந்திரம் அப்புறப்படுத்தப்பட்டு அதில் பலகையை வைத்து அடைத்து இருந்தனர்.

    இந்த நிலையில் அந்த பலகையை உடைத்து 3 கொள்ளையர்கள் வங்கிக்குள் சென்றனர்.

    கொள்ளையர்கள் பணம் இருந்த வங்கி லாக்கருக்கு சென்றனர். ஆனால் அவர்களால் லாக்கரை உடைக்க முடியவில்லை. பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.

    சனிக்கிழமை இரவு கொள்ளையர்கள் வங்கிக்குள் நுழைந்து இருந்தனர். நேற்று வங்கிக்கு விடுமுறையாகும்.

    இன்று காலை வங்கி ஊழியர்கள் பணிக்கு வந்த பிறகே இந்த கொள்ளை முயற்சி சம்பவம் தெரிய வந்தது.

    லாக்கரை உடைக்க முடியாததால் வங்கியில் இருந்த ரூ. 9 கோடி பணம் தப்பியது. அதில் ரூ.7 கோடி பழைய நோட்டுகளும், ரூ. 2 கோடி புதிய நோட்டுகளும் இருந்தன.

    இந்த கொள்ளை முயற்சி சம்பவம் குறித்து அண்ணா சாலை போலீசில் வங்கி சார்பில் புகார் தெரிவிக்கப்பட்டது. இணை கமி‌ஷனர் மனோகரன், திருவல்லிக்கேணி உதவி கமி‌ஷனர் முத்துவேல் பாண்டியன் ஆகியோர் தலைமையில் அண்ணா சாலை இன்ஸ்பெக்டர் அருணாசலராஜா இது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்.

    மோப்ப நாயும், கைரேகை நிபுணர்களும் வங்கிக்கு உடனடியாக வர வழைக்கப்பட்டது. வங்கியில் இருந்த ரேகைகளை நிபுணர்கள் பதிவு செய்தனர்.

    வங்கியில் கேமிரா பொருத்தப்பட்டு இருந்தது. அதில் கொள்ளையர்கள் உருவம் பதிவு ஆகி இருக்கிறதா? என்று ஆய்வு செய்யப்பட்டது.

    கொள்ளையன் ஒருவன் இரவு 9.30 மணிக்கு வங்கிக்குள் நுழைவதும், 3 மணி நேரம் கழித்து அவன் வெளியே வருவதும் காமிராவில் பதிவாகி உள்ளது.

    வங்கி லாக்கரில் ரூ. 9 கோடி பணம் இருந்ததாகவும், லாக்கரை கொள்ளையர்கள் உடைக்க முடியாததால் அந்த பணம் தப்பியதாக வங்கி தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

    இதே வங்கியின் அடையாறு சாஸ்திரி நகர் கிளையில் ரூ.25 லட்சம் செல்லாத நோட்டுகள் பண பரிமாற்றத்தில் கொள்ளை போய் இருந்தது. இதில் வங்கி மேலாளர்கள் உடந்தையாக இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

    இந்த நிலையில் இந்த வங்கியின் மற்றொரு கிளையில் கொள்ளை முயற்சி சம்பவம் நடந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×