என் மலர்

  செய்திகள்

  மூட்டை மூட்டையாக உப்பை வாங்கிச் செல்லும் வாலிபர்.
  X
  மூட்டை மூட்டையாக உப்பை வாங்கிச் செல்லும் வாலிபர்.

  திருத்தணி பள்ளிப்பட்டு பகுதியில் உப்பு தட்டுப்பாடு வதந்தி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருத்தணி பள்ளிப்பட்டு பகுதியில் உப்பு தட்டுப்பாட்டு வதந்தியால் ரூ.35 மதிப்புள்ள உப்பை ரூ.200-க்கு விற்பனை செய்தனர்.

  திருத்தணி:

  மத்திய அரசு ரூ.500, ரூ.1000 நோட்டுகள் செல்லாது என்று அறிவித்ததால் அத்தியாவசிய பொருட்கள் வாங்க பொது மக்கள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகிறார்கள். அவர்கள் தங்களிடம் உள்ள பழைய ரூ.500, 1000 நோட்டுகளை மாற்ற தினமும் வங்கிகள் முன்பு காத்து கிடக்கின்றனர்.

  இந்த நிலையில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளதாக வடமாநிலங்களில் புரளி பரவியது. டெல்லி, உத்தர பிரதேச மாநிலங்களில் பொது மக்கள் போராட்டங்களிலும் ஈடுபட்டனர்.

  இதற்கிடையே திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதிகளில் உப்புக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு இருப்பதாக திடீரென வதந்தி பரவியது.

  இதனால் வங்கிகளில் காத்து கிடந்த பொது மக்கள் மளிகை கடைகள் முன்பு திரண்டனர். அவர்கள் மூட்டை, மூட்டையாக உப்பு பாக்கெட்டுகளை வீட்டுக்கு வாங்கிச் சென்றனர்.

  பொது மக்களின் இந்த திடீர் படையெடுப்பால் திருத்தணி, பள்ளிப்பட்டு, ஆர்.கே.பேட்டை, மத்தூர், பொதட்டூர்பேட்டை பஜார் வீதிகளில் உப்பு விற்பனை சூடு பிடித்தது. நீண்ட வரிசையில் காத்திருந்து உப்பு பாக்கெட்டுகளை வாங்கிச் சென்றனர்.

  இதனை சாதகமாக பயன்படுத்திக் கொண்ட சில வியாபாரிகள் 12 பாக்கெட்டுகள் கொண்ட ரூ.35 மதிப்புள்ள உப்பு மூட்டையை ரூ.200-க்கு விற்பனை செய்தனர். அதனை பொது மக்கள் போட்டி போட்டு வாங்கினர். சில கடைகளில் 500 ரூபாய் நோட்டு கொடுத்து தகராறும் ஏற்பட்டது.

  இச்சம்பவத்தால் திருத்தணி, பள்ளிப்பட்டு பகுதியில் இரவு நீண்ட நேரம் வரை விற்பனை நீடித்தது. இது குறித்து திருத்தணி பஜாரில் மளிகை கடை வைத்திருக்கும் வியாபாரி முருகன் கூறும் போது, நேற்று காலை முதல் திடீரென உப்பு பாக்கெட் கேட்டு ஏராளமான பொது மக்கள் கடைக்கு வந்தனர்.

  அதன் பின்னரே உப்பு தட்டுப்பாடு புரளி ஏற்பட்டு இருப்பது தெரிந்தது. கடைகளில் போதுமான உப்பு பாக்கெட் இருப்பு உள்ளது. தட்டுப்பாடு கிடையாது. பொது மக்கள் ஏமாற வேண்டாம்’’ என்றார்.

  உப்பு தட்டுப்பாட்டு வதந்தியால் பள்ளிப்பட்டை ஒட்டி உள்ள ஆந்திர மாநில கிராம மக்கள் ஏராளமானோர் மூட்டை மூட்டையாக உப்பு வாங்கிச் சென்றனர்.

  Next Story
  ×