search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    சேலம் ரெயில் கொள்ளையில் பெட்டியில் சிக்கிய கைரேகையை வைத்து விசாரணை
    X

    சேலம் ரெயில் கொள்ளையில் பெட்டியில் சிக்கிய கைரேகையை வைத்து விசாரணை

    சேலம் ரெயிலில் ரூ.6 கோடி கொள்ளையில் ரெயில் பெட்டியில் பதிந்து உள்ள சில கைரேகை வைத்து தற்போது சேலத்தில் விசாரணை நடக்கிறது.
    சேலம்:

    சேலம் ஜங்சனில் இருந்து எழும்பூர் எக்ஸ்பிரஸ் ரெயிலில் கொண்டு சென்ற ரூ.6 கோடி ரொக்கப்பணம் கொள்ளையடிக்கப்பட்டது.

    இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க சி.பி.சி.ஐ.டி. போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்தியன் வங்கி மற்றும் இந்தியன் ஓவர்சீஸ் வங்கிக்கு சொந்தமான இந்த பணம் கொள்ளை குறித்து தீவிர விசாரணை செய்தும் எந்த துப்பும் கிடைக்கவில்லை.

    இவர்கள் தவிர சேலம் மாநகர போலீஸ் கமி‌ஷனர் சஞ்சய்குமார் அமைத்துள்ள தனிப்படை போலீசாரும் தீவிர விசாரணை செய்து வருகிறார்கள். ஆனால் இன்னும் யாரும் கைது செய்யப்படவில்லை.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் பல கட்டங்களாக விசாரணை செய்து முடித்துள்ளனர். சுமார் 500-க்கும் மேற்பட்டோரிடம் விசாரணை நடந்து இருக்கிறது.

    இந்த நிலையில் தற்போது சி.பி.சி.ஐ.டி. போலீசார் சேலத்தில் மீண்டும் விசாரணையை தொடங்கி இருக்கிறார்கள்.

    சி.பி.சி.ஐ.டி. போலீசார் விசாரணையில் வங்கி பணம் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்க வாய்ப்பு இல்லை என்றும், சேலம் ஜங்சன் ரெயில் நிலையம் அல்லது எழும்பூர் ரெயில்நிலையத்தில் தான் கொள்ளையடிக்க வாய்ப்பு உள்ளது என்றும் தெரியவந்து இருக்கிறது.

    ஓடும் ரெயிலில் ஏறி கொள்ளையடித்தால் கைரேகை பல இடங்களில் பதிவாகி இருக்கும். ஆனால் ரெயில் பெட்டியில் ஒரு சில பகுதிகளில் தான் கைரேகை உள்ளது. இதுதவிர ஓடும் பெட்டியில் ஏறினாலோ, கீழே இறங்கினாலோ கால் தடம் மற்றும் கைரேகைகள் பல இடங்களில் நிச்சயம் பதிந்து இருக்கும். ஆனால் கால் தடம், கை ரேகை பல இடங்களில் இல்லை.

    ஒரு சில கைரேகை மட்டுமே உள்ளதால் வங்கி பணம் ஓடும் ரெயிலில் கொள்ளையடிக்கவில்லை என்றும், ரெயில் நின்று இருக்கும் போது தான் கொள்ளையடிக்கப்பட்டு இருக்கிறது என்றும் தெரிய வந்துள்ளது.

    ரெயில் பெட்டியில் பதிந்து உள்ள சில கைரேகை வைத்து தற்போது சேலத்தில் விசாரணை நடக்கிறது. ஏற்கனவே சேலத்தில் பலரது கைரேகை எடுத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது. இப்போது இவர்கள் மீண்டும் அழைத்து வந்து விசாரணை நடக்கிறது.
    Next Story
    ×