என் மலர்

  செய்திகள்

  திருவள்ளூரில் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க முகாம் 12-ந் தேதி நடக்கிறது
  X

  திருவள்ளூரில் குடும்ப அட்டையில் பெயர் சேர்க்க முகாம் 12-ந் தேதி நடக்கிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முக வரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.
  திருவள்ளூர்:

  திருவள்ளூர் மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறி இருப்பதாவது:-

  திருவள்ளூர் மாவட்டத்தில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முக வரி மாற்றம் தொடர்பான சிறப்பு முகாம் வருகிற 12-ந் தேதி நடைபெற உள்ளது.

  நத்தம்பேடு (மதுரா) கண்ணடபாளையம், கீழ்கரமனூர், வீரராகபுரம், காஞ்சிபாடி, ஆதிவராகபுரம், கனகம்பாக்கம், முக்கரம் பாக்கம், நெமிலிச்சேரி ஆகிய கிராமங்களில் அந்தந்த கிராம நிர்வாக அலுவலகங்களில் சிறப்பு முகாம் நடைபெறுகிறது.

  சிறப்பு முகாம் நடைபெறும் கிராமத்தை சேர்ந்த பொது மக்கள் தங்கள் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல் தொடர்பான விண்ணப்பங்களை உரிய ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம்.
  Next Story
  ×