என் மலர்

  செய்திகள்

  சேலத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்
  X

  சேலத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சேலத்தில் இன்ஸ்பெக்டர்கள் மாற்றப்பட்டுள்ளனர். இதற்கான உத்தரவை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் பிறப்பித்துள்ளார்.
  சேலம்:

  சேலம் சூரமங்கலம் இன்ஸ்பெக்டர் தங்கம் உணவு கடத்தல் தடுப்பு பிரிவுக்கு மாற்றப்பட்டு இருந்தார்.  இவருக்கு பதிலாக காத்திருப்போர் பட்டியலில் இருந்த பி.கே.செந்தில்குமார் சூரமங்கலம் இன்ஸ்பெக்டராக மாற்றப்பட்டுள்ளார். காத்திருப்போர் பட்டியலில் இருந்த இன்ஸ்பெக்டர் வளர்மதி சைபர் கிரைம் பிரிவுக்கு மாற்றப்பட்டுள்ளார்.

  சேலம் கிச்சிப்பாளையம் இன்ஸ்பெக்டர் எம்.எஸ். சரவணன் சேலம் அன்னதானப்பட்டி போலீஸ் நிலையத்திற்கும், இரும்பாலை இன்ஸ்பெக்டர் மரிய முத்து சேலம் மத்திய குற்றப்பிரிவுக்கும், இங்கு பணியாற்றி வந்த இன்ஸ்பெக்டர் பி.சரவணன் இரும்பாலை போலீஸ் நிலையத்திற்கும் மாற்றப்பட்டு உள்ளனர்.

  இதற்கான உத்தரவை சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் சஞ்சய்குமார் பிறப்பித்துள்ளார்.
  Next Story
  ×