என் மலர்

  செய்திகள்

  கருங்கல் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை
  X

  கருங்கல் அருகே வேலை கிடைக்காத விரக்தியில் வாலிபர் தற்கொலை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கருங்கல் அருகே படிப்புக்கேற்ற வேலை கிடைக்காததால் விரக்தி அடைந்த வாலிபர் தற்கொலை செய்து கொண்டார்.
  நாகர்கோவில்:

  கருங்கல் அருகே உள்ள திக்கணங்கோடு பகுதியை சேர்ந்தவர் ஜாண்சன். இவரது மகன் ஜெபின் (வயது 22). இவர் டிப்ளமோ படித்துள்ளார்.

  இந்த நிலையில் அவருக்கு கோவையில் ஒரு கம்பெனியில் வேலை கிடைத்தது. அங்கு பணியாற்றி வந்த அவர் தனது படிப்புக்கேற்ற வேலை கிடைக்கவில்லை என மன வருத்தத்தில் இருந்து வந்தார். விடுமுறையில் ஊருக்கு வந்திருந்த ஜெபின் வீட்டில் யாரும் இல்லாத நேரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

  வீடு திரும்பிய அவரது பெற்றோர் ஜெபின் தற்கொலை செய்து கொண்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

  இதுகுறித்து கருங்கல் போலீசில் புகார் செய்யப்பட்டது. சப்-இன்ஸ் பெக்டர் சுரேஷ்குமார் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் ரசல் ராஜ் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
  Next Story
  ×