என் மலர்

  செய்திகள்

  காதல் தகராறில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு
  X

  காதல் தகராறில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல்: 4 பேர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தென்தாமரை குளம் அருகே காதல் தகராறில் வாலிபரை தாக்கி கொலை மிரட்டல் விடுத்த 4 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
  என்.ஜி.ஓ,காலனி:

  தென்தாமரை குளத்தை சேர்ந்தவர் விபின் (வயது 25). கட்டிட தொழிலாளி.
  இவர் மேல புல்லுவிளை, காமிச்சன்பரப்பு பகுதியை சேர்ந்த இளம்பெண் ஒருவரை  கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து வந்தார். இருவரும் பெற்றோர் எதிர்ப்பை மீறி வீட்டை விட்டு மாயமானார்கள். போலீசார் அவர்களை மீட்டு வந்தனர்.

  விசாரணையில்  அந்த பெண்ணுக்கு திருமண வயது வராததால் போலீசார் அவரை பெற்றோருடன் அனுப்பி வைத்தனர். பெண்ணை வீட்டுக்கு அழைத்து சென்ற பெற்றோர் அவரை வெளியூருக்கு அனுப்பி  வைத்து உறவினர் வீட்டில் தங்க வைத்தனர்.

  வெளியூரில் தங்கி இருந்த அந்த பெண் தீபாவளிக்காக  சமீபத்தில் சொந்த ஊருக்கு வந்தார். இந்த நிலையில் விபின் மேல  புல்லுவிளையில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றார். இதனை  அந்த பெண்ணின் உறவினர்கள் ராஜன், மணிகண்டன், சரவணன் மற்றும் பார்த்திபன் ஆகியோர் பார்த்தனர்.
  அவர்கள் தெங்கம்புதூர்  டாஸ்மாக் கடை முன்பு விபின் வந்த போது அவரை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் 4 பேரும் சேர்ந்து விபினை புல்லுவிளை பகுதிக்கு கடத்தி சென்று சரமாரியாக தாக்கினர்.

  இதை கண்ட  விபினின் உறவினர்கள் பாலன், ஜேசு, ரமேஷ் ஆகியோர் ஓடி சென்று விபினை காப்பாற்ற முயன்றனர். இதில் அவர்களுக்கும் அடி-உதை விழுந்தது. படுகாயம் அடைந்த 4 பேரின் அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். அவர்கள் 4 பேரையும் மீட்டு ஆசாரிபள்ளம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

  இந்த சம்பவம் பற்றி விபின், சுசீந்திரம் போலீசில் புகார் செய்தார். அதில் உறவினர் வீட்டுக்கு சென்ற தன்னை ராஜன், மணிகண்டன், சரவணன் மற்றும் பார்த்திபன் ஆகிய 4 பேரும் சேர்ந்து தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததாகவும், தன்னிடம் இருந்த  ரொக்க பணம் மற்றும் கழுத்தில் அணிந்திருந்த 1 பவுன் தங்க சங்கிலி ஆகியவற்றையும் திருடி சென்றதாகவும் கூறியிருந்தார்.

  அதன்பேரில் சுசீந்திரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் சாம்சன், சப்-இன்ஸ்பெக்டர்கள் சுபாஷ், பிச்சை, காந்தி ஆகியோர் விசாரணை நடத்தி  ராஜன், மணிகண்டன், சரவணன், பார்த்திபன் ஆகிய 4 பேர் மீதும் இந்திய தண்டனை சட்டம் 341, 323, 324, 379 மற்றும் 506(2) ஆகிய பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து அவர்களை தேடி வருகிறார்கள்.
  Next Story
  ×