என் மலர்

  செய்திகள்

  திருத்துறைப்பூண்டி அருகே சாராயம் பதுக்கிய பெண் உள்பட 2 பேர் கைது
  X

  திருத்துறைப்பூண்டி அருகே சாராயம் பதுக்கிய பெண் உள்பட 2 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருத்துறைப்பூண்டி அருகே சாராயம் பதுக்கிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

  திருத்துறைப்பூண்டி:

  திருத்துறைப்பூண்டி அருகே உள்ள கொற்கை கால்நடைப் பண்ணை அடர்ந்த வனப்பகுதியில் கடந்த 25-ந்தேதி அங்குள்ள 50 அடி உயரமுள்ள பாழடைந்த நீர்தேக்கத் தொட்டியில் பாண்டிச்சேரி மாநில 180 மில்லி கொள்ளளவு கொண்ட சாராய பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

  இதன்பேரில் திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ராஜ்குமார் மற்றும் தீயணைப்பு நிலைய அலுவலர் சேகர், பொறுப்பு அலுவலர் வீரமணி ஆகியோர் சென்று ஆய்வு செய்த போது 1500 சாராய பாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பது தெரியவந்துள்ளது.

  சாராயத்தை பறிமுதல் செய்த போலீசார் அதனை பதுக்கியதாக கொக்கலாடியை சேர்ந்த சிறைமீட்டான் மகன் குமார், முருகேசன் மனைவி பிரேமா, குமார் மனைவி நளினி ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து தேடி வந்தனர்.

  இந்த நிலையில் பிரேமா (45) மற்றும் ரவி மகன் செல்லமுத்து (23) ஆகிய இருவரும் கொக்கலாடியில் பதுங்கி இருப்பது தெரிந்து போலீசார் இருவரையும் கைது செய்தனர்.

  Next Story
  ×