search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மே மாதம் நிறைவடைகிறது
    X

    மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மே மாதம் நிறைவடைகிறது

    மெட்ரோ ரெயில் சுரங்கப்பாதை அமைக்கும் பணி மே மாதம் நிறைவடைகிறது என ரெயில்வே அதிகாரி ஒருவர் தகவல் தெரிவித்தார்.
    சென்னை:

    சென்னையில் மெட்ரோ ரெயில் திட்டம் 2 வழித்தடம் வழியாக நிறைவேற்றப்படுகிறது. வண்ணாரப்பேட்டையில் இருந்து விமான நிலையம் வரை ஒரு வழித்தடமாகவும், சென்ட்ரல் ரெயில் நிலையம் - கோயம்பேடு - பரங்கிமலை வரை மற்றொரு வழித்தடத்திலும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்பட உள்ளன.

    இந்த 2 வழித்தடத்திலும் உயர்மட்ட பாதையிலும் சுரங்க பாதை வழியாகவும் மெட்ரோ ரெயில்கள் இயக்கப்படும்.

    கோயம்பேடு - பரங்கிமலை இடையே உயர்மட்ட பாதையில் மெட்ரோ ரெயில் சேவை தற்போது நடைபெற்று வருகிறது. இது தவிர விமான நிலையம் - சின்னமலை இடையேயும் சேவை தொடங்கப்பட்டுள்ளது. விமான நிலையம் அருகில் குறைந்த தூத்தில் சுரங்கப்பாதையில் மெட்ரோ ரெயில் சென்று வருகின்றன.

    ஆனால் இன்னும் சுரங்கப்பாதை முழுமையாக தொடங்கவில்லை. சுரங்கப்பாதை பணிகள் 90 சதவீதம் நிறைவடைந்துள்ளன. மீதமுள்ள பணிகள் 6 மாதத்திற்குள் நிறைவடையும் என்று மெட்ரோ ரெயில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

    இதுகுறித்து மெட்ரோ ரெயில் அதிகாரி கூறியதாவது:-

    சென்னையில் சுரங்கப்பாதை அமைக்க ‘டனல் போரிங்’ எந்திரம் வெளிநாடுகளில் இருந்து கொண்டு வரப்பட்டு பயன்படுத்தப்படுகிறது. 11 டனல் போரிங் எந்திரங்கள் கடந்த 4 ஆண்டுகளாக பயன்படுத்தப்பட்டன. பெரும்பாலான பணிகள் முடிந்து விட்டதால் தற்போது 5 சுரங்கம் தோண்டு எந்திரங்கள் மட்டுமே உள்ளன.

    சுரங்கப் பாதை மொத்தம் 28 கிலோ மீட்டர் தூரத்திற்கு அமைக்கப்பட வேண்டும். இதில் 18 கிலோ மீட்டர் தூரத்திற்கு பணிகள் முடிந்து விட்டன. மீதமுள்ள 6 கிலோ மீட்டர் தூரத்திற்கு சுரங்க பணிகள் நடைபெற வேண்டும். இதில் இதுவரை 16 கிலோ மீட்டர் தூரத்திற்கு போரிங் செய்யப்பட்டுள்ளன.

    சுரங்கப் பாதை அமைக்க ஆழப்படுத்தும்போது சில இடங்களில் கடினமான பாறைகளும் இருந்தன. இதனால் அவற்றை குடைந்து செல்வதில் கஷ்டமான நிலை ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக தாமதம் உண்டானது.

    ஆனாலும் சுரங்கப் பாதை பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. 6 மாதத்தில் அனைத்து பணிகளும் நிறைவடைந்து விடும். 2017 மே மாதம் சுரங்கப் பாதை தயாராகி விடும்.

    இவ்வாறு அவர் கூறினார்.
    Next Story
    ×