என் மலர்

  செய்திகள்

  பேராசிரியையிடம் நகை பறித்த கல்லூரி மாணவர்கள் கைது
  X

  பேராசிரியையிடம் நகை பறித்த கல்லூரி மாணவர்கள் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தஞ்சையில் கல்லூரி பேராசிரியையிடம் நகை பறித்த 2 வாலிபர்கள் கைது செய்யப்பட்டனர்.

  தஞ்சாவூர்:

  தஞ்சை ஜோதி நகரை சேர்ந்தவர் மோகன்ராஜ். இவரது மனைவி சரண்யா (28). கல்லூரி பேராசிரியை. இவர் கடந்த 14.9.2016 அன்று கல்லூரி முடிந்து தனது இருசக்கர வாகனத்தில் வீடு திரும்பி கொண்டிருந்தார்.

  பட்டுக்கோட்டை பைபாஸ் சாலையில் வந்த போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள் சரண்யா அணிந்திருந்த 6 பவுன் நகையை பறித்து கொண்டு தப்பி சென்று விட்டனர்.

  இது குறித்து தஞ்சை தாலுகா போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் சரண்யாவிடம் நகை பறித்தது அய்யம்பேட்டை திருநகர் மற்றும் மேவவழுத்தூரை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது.

  அவர்களை போலீசார் கைது செய்தனர். இருவரும் கல்லூரி மாணவர்கள் ஆவார்கள். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.

  Next Story
  ×