என் மலர்

  செய்திகள்

  பரமக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி
  X

  பரமக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பரமக்குடி அருகே மோட்டார் சைக்கிள் விபத்தில் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் பரிதாபமாக இறந்தார்.

  பரமக்குடி:

  பரமக்குடி அருகே உள்ள நயினார்கோவில் போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்தவர் முகமது சரீப் (வயது51). இவர் பரமக்குடியில் உள்ள போலீஸ் குடியிருப்பில் குடும்பத்துடன் வசித்து வந்தார்.

  நேற்று இரவு பணிக்காக போலீஸ் நிலையத்திற்கு மோட்டார் சைக்கிளில் புறப்பட்டார். வலசை அருகே சென்றபோது மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறக ஓடி கவிழ்ந்தது. இதில் முகமது சரீப்புக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே அவர் பரிதாபமாக இறந்தார்.

  இதுகுறித்து நயினார் கோவில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

  Next Story
  ×