என் மலர்

  செய்திகள்

  பள்ளிக்கூடங்களில் ஆதார் பதிவு செய்யும் பணி 15-ந்தேதி மீண்டும் தொடங்குகிறது
  X

  பள்ளிக்கூடங்களில் ஆதார் பதிவு செய்யும் பணி 15-ந்தேதி மீண்டும் தொடங்குகிறது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மாணவ- மாணவிகள் நலன்கருதி விடுபட்ட மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களில் ஆதார் பதிவு செய்யும் பணி 15-ந்தேதி மீண்டும் தொடங்குகிறது.
  சென்னை:

  முகவரி சான்றுக்கு ரே‌ஷன் கார்டு போல் ஆதார் அட்டையும் மிகவும் அவசியம் ஆகிவிட்டது. இதனால் ஒவ்வொரு வீட்டிலும் ஆதார்அட்டை கட்டாயம் வைத்திருக்கிறார்கள். ஆதார் அட்டை இல்லாதவர்கள் மாநகராட்சி மண்டல அலுவலங்களுக்கு சென்று ஆதார் அட்டைக்கு பதிவு செய்து வருகிறார்கள். இதனால் அங்கு நீண்ட கியூ காணப்படுகிறது.

  மாணவ- மாணவிகள் நலன்கருதி விடுபட்ட மாணவர்களுக்கு பள்ளிக்கூடங்களிலேயே ஆதார் அட்டை வழங்க மீண்டும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது.

  இதன்படி சென்னையில் வருகிற 15-ந்தேதி முதல் பள்ளிக்கூடங்களுக்கு ஊழியர்கள் சென்று விடுபட்ட மாணவ- மாணவிகளுக்கு ஆதார் அட்டை பதிவு செய்து வழங்க உள்ளனர்.
  Next Story
  ×