என் மலர்

  செய்திகள்

  மதுரையில் 109 மதுபாட்டில்கள் பறிமுதல்: 5 பேர் கைது
  X

  மதுரையில் 109 மதுபாட்டில்கள் பறிமுதல்: 5 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரையில் சட்ட விரோதமாக மது விற்ற 5 பேரை போலீசார் கைது செய்து 109 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

  மதுரை:

  மதுரையில் சட்டவிரோதமாக மது விற்பதை தடுக்க மதுவிலக்கு தடுப்பு பிரிவு போலீசார் தீவிர ரோந்து சுற்றி வருகின்றனர். அதன் படி நேற்று நள்ளிரவு நகரின் பல்வேறு பகுதிகளில் போலீசார் ரோந்து சென்றனர்.

  மதுரை தெற்குவெளி வீதியில் மது விற்று கொண்டிருந்த தினகரன் என்பவரை போலீசார் கைது செய்து அவரிடம் இருந்து 38 மதுபாட்டில்களையும், ரூ.14,450-ம் பறிமுதல் செய்தனர்.

  இதேபோல் ஜெய்ஹிந்த்புரத்தில் மதுவிற்ற வேணு கோபாலை கைது செய்த போலீசார் 38 மதுபாட்டில்களையும், திருநகரில் மதுவிற்ற பத்மநாபனை கைது செய்து 12 மதுபாட்டில்களையும், ரூ.1,200-ம் பறி முதல் செய்தனர்.

  மதுரை அருகே உள்ள அச்சம்பத்து பகுதியில் மதுவிற்று கொண்டிருந்த கணேசன், மணிகண்டன் ஆகியோரை போலீசார் கைது செய்து 21 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர்.

  Next Story
  ×