என் மலர்

  செய்திகள்

  சூலூர் அருகே வீட்டு கதவை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை
  X

  சூலூர் அருகே வீட்டு கதவை உடைத்து 12 பவுன் நகை கொள்ளை

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  சூலூர் அருகே வீட்டு கதவை உடைத்து 12 பவுன் நகை கொள்ளையடிக்கபட்டது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

  சூலூர்:

  சூலூர் விமானப்படைத் தளம் அருகேயுள்ள டிபன்ஸ் காலனியை சேர்ந்தவர் சுஜி (வயது32).இவர் தனது குடும்பத்துடன் தீபாவளியன்று காலை கேரளாவில் தனது உறவினர் வீட்டிற்கு சென்றுள்ளார். சூலூரில் உள்ள தனது வீட்டிற்கு திரும்ப வந்துள்ளார்.

  அப்போது வீட்டின் முன் கதவு உடைக்கப்பட்டு உள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தார். சுஜி வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ மற்றும் சூட்கேஸ் உடைக்கப்பட்டு துணிகள் பொருள்கள் சிதறி கிடந்தது மேலும் பீரோ சூட்கேசில் இருந்த பணம் ரூ.67 ஆயிரம் மற்றும் 12 பவுன் நகை ஆகியவை கொள்ளையடிக்கப்பட்டிருப்பது தெரிய வந்தது .கொள்ளையர்கள் முன் பக்கமாக வந்து கொள்ளையடித்துவிட்டு பின் கதவு வழியே வெளியே சென்றது தெரிய வந்தது.

  உடனடியாக சூலூர் போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தார். போலீசார் மற்றும் கை ரேகை நிபுணர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சோதனையிட்டனர்.

  இந்த சம்பவம் பற்றி சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  Next Story
  ×