என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
பொள்ளாச்சி லாட்ஜில் கடன்சுமை காரணமாக டிரைவர் தற்கொலை
Byமாலை மலர்18 Oct 2016 5:05 PM IST (Updated: 18 Oct 2016 5:05 PM IST)
பொள்ளாச்சி லாட்ஜில் கடன்சுமை காரணமாக டிரைவர் தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கோவை:
கோவை ஆர்.எஸ்.புரம் வெங்கடகிருஷ்ணா ரோட்டை சேர்ந்தவர் ஆனந்தபாபு (வயது 33). டிரைவர். இவரது மனைவி மகேஷ்வரி. இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர்.
ஆனந்தபாபு அந்த பகுதியை சேர்ந்த சிலரிடம் கடன் வாங்கியிருந்தார். ஆனால் தொழிலில் போதுமான வருமானம் இல்லாததால் கடனை திருப்பி செலுத்த முடியாமல் மிகவும் சிரமபட்டு வந்தார். இதனால் மனமுடைந்து கடந்த 2 நாட்களுக்கு முன்பு ஆனந்தபாபு வீட்டில் உள்ளவர்களிடம் எந்த தகவலும் தெரிவிக்காமல் பொள்ளாச்சிக்கு சென்றார்.
அங்கு ராஜா மில் ரோட்டில் உள்ள ஒரு லாட்ஜில் அறை எடுத்து தங்கி உள்ளார். பின்னர் கடன்சுமை காரணமாக லாட்ஜில் வைத்து விஷத்தை குடித்து தற்கொலை செய்து கொண்டார். நீண்ட நேரமாக ஆனந்த பாபு தங்கியிருந்த அறைக்கதவு திறக்காததால் சந்தேகம் அடைந்த லாட்ஜ் ஊழியர்கள் கதவை தட்டினர். கதவு திறக்கப்படவில்லை. ஜன்னல் வழியாக எட்டிப்பார்த்தனர். அப்போது ஆனந்தபாபு தற்கொலை செய்தது கண்டு அதிர்ச்சியடைந்தனர்.
பின்னர் இது குறித்து பொள்ளாச்சி மேற்கு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து வந்து அறைக்கதவை திறந்து ஆனந்த பாபுவின் உடலை மீட்டு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story
×