search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    மதுரையில் ரூ.50 லட்சம் கேட்டு வங்கி பெண் ஊழியருக்கு மிரட்டல்: ஆட்டோ டிரைவர் கைது
    X

    மதுரையில் ரூ.50 லட்சம் கேட்டு வங்கி பெண் ஊழியருக்கு மிரட்டல்: ஆட்டோ டிரைவர் கைது

    மதுரையில் ரூ.50 லட்சம் கேட்டு வங்கி பெண் ஊழியரை மிரட்டியதாக ஆட்டோ டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
    மதுரை:

    மதுரை புதுவிளாங்குடி பேங்க் காலனியை சேர்ந்தவர் கண்ணதாசன் (வயது42), ஆட்டோ டிரைவரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த வங்கி பெண் ஊழியருக்கும் பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    இதை பயன்படுத்தி அந்த பெண் வேலைபார்க்கும் வங்கியில் கண்ணதாசன் ரூ.21 லட்சம் கடன் வாங்கியுள்ளார். இந்நிலையில அவர் கடன் பணத்தை கட்டவில்லை என கூறப்படுகிறது.

    இது குறித்து அந்த பெண் கண்ணதாசனிடம் கேட்டபோது அவர் ரூ.50 லட்சம் கேட்டு மிரட்டியதாக போலீசில் அந்த பெண் புகார் கொடுத்தார். அதன் பேரில் கூடல்புதூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கண்ணதாசனை கைது செய்தனர்.
    Next Story
    ×