என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
X
குடி பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் திருமணமான வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை
Byமாலை மலர்13 Oct 2016 3:56 PM IST (Updated: 13 Oct 2016 3:56 PM IST)
புதுவை கொம்பாக்கத்தில் குடி பழக்கத்தை பெற்றோர் கண்டித்ததால் திருமணமான வாலிபர் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
புதுச்சேரி:
புதுவை கொம்பாக்கத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). கொத்தனார். இவரது மனைவி தீபா. இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.
மணிகண்டன், தனது பெற்றோர் வசிக்கும் வீட்டின் மாடியில் குடும்பத்துடன் வசித்து வந்தார். நேற்று இரவில் இவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்ததாக தெரிகிறது. அதனை கண்ட அவரது பெற்றோர் கண்டித்தனர்.
இதனால் ஆத்திரமடைந்த மணிகண்டன் அவர்களுடன் தகராறு செய்தார். பின்னர், பெற்றோர் கண்டித்ததால் ஏற்பட்ட விரக்தியில், தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடலை கண்டு மனைவி மற்றும் குடும்பத்தினர் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
முதலியார்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
Next Story
×