என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள் (Tamil News)
தென்காசி அருகே வட மாநில தொழிலாளி பலி
தென்காசி:
தென்காசி அருகே உள்ள மேலகரம் மெயின்ரோட்டில் ஒரு ஆண் பிணம் கிடந்தது. இது குறித்து அந்த வழியாக சென்ற பொதுமக்கள் குற்றாலம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு குற்றாலம் இன்ஸ்பெக்டர் ஜானகி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர்.
பின்னர் போலீசார் உடலை மீட்டு தென்காசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்தவருக்கு சுமார் 50 வயது இருக்கும். வெள்ளை வேஷ்டியும், கட்டம் போட்ட சட்டையும் அவர் அணிந்துள்ளார். இறந்து கிடந்தவர் அப்பகுதியில் சமீப காலமாக அப்பகுதியில் நடமாடி வந்ததாகவும், இந்தி பேசி வந்ததும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இறந்து கிடந்தவர் யார்? பெயர் விவரம் என்ன? வடமாநிலத்தை சேர்ந்தவரா? எனவும் உடல்நலக்குறைவு காரணமாக இறந்தாரா அல்லது வேறு ஏதேனும் காரணமா? என பல கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.