search icon
என் மலர்tooltip icon

    செய்திகள் (Tamil News)

    சென்னை விமான நிலையத்தில் ரூ. 17 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்: வாலிபர் கைது
    X

    சென்னை விமான நிலையத்தில் ரூ. 17 லட்சம் வெளிநாட்டு பணம் பறிமுதல்: வாலிபர் கைது

    சென்னை விமான நிலையத்தில் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ.17 லட்சம் வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக சாகுல் அமீதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    சென்னை:

    சென்னையில் இருந்து சிங்கப்பூருக்கு நேற்று நள்ளிரவு பயணிகள் விமானம் புறப்பட தயாராக இருந்தது. அதில் ஹவாலா பணம் கடத்தப்படுவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    இதையடுத்து சிங்கப்பூர் விமானத்தில் ஏற வந்த பயணிகளின் உடமைகளை அதிகாரிகள் சோதனை செய்தனர். பெரம்பூரை சேர்ந்த சாகுல் அமீதுவின் சூட்கேசை திறந்து பார்த்த போது கட்டுக்கட்டாக அமெரிக்க டாலர் யூரோ பணம் இருப்பது தெரிந்தது. அதற்கான ஆவணங்கள் சாகுல் அமீதுவிடம் இல்லை.

    இதைத் தொடர்ந்து வெளிநாட்டு பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இந்திய ரூபாயில் இதன் மதிப்பு ரூ. 17 லட்சம் ஆகும்.

    பிடிபட்டது ஹவாலா பணமாக இருக்கலாம் என்று அதிகாரிகள் சந்தேகிக்கிறார்கள். இது தொடர்பாக சாகுல் அமீதுவை கைது செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சென்னை விமான நிலையத்தில் நேற்றும் சிங்கப்பூருக்கு கடத்த முயன்ற ரூ. 1 கோடியே 23 லட்சம் வெளிநாட்டு பணத்துடன் 3 பேர் சிக்கினர். தற்போது மீண்டும் ஒருவர் சிக்கி இருப்பது அதிகாரிகள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×