என் மலர்

  செய்திகள்

  வடுவூர் அருகே பள்ளி வேன் மோதி விவசாயி பலி
  X

  வடுவூர் அருகே பள்ளி வேன் மோதி விவசாயி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  வடுவூர் அருகே பள்ளி வேன் மோதி விவசாயி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  வடுவூர்:

  திருவாரூர் மாவட்டம் வடுவூர் அருகே உள்ள எடகீழையூரை சேர்ந்தவர் செல்லையன் (வயது 70). இவர் நேற்று மாலை 5 மணியளவில் மதுகுடித்துவிட்டு அதே பகுதியில் உள்ள டீக்கடை அருகே மயங்கி கிடந்துள்ளார்.

  அப்போது அந்த வழியாக வந்த ஒரு பள்ளி வேன் வளைவில் திரும்பியபோது ரோட்டோரம் படுத்திருந்த செல்லையன் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

  இந்த விபத்து பற்றிய தகவல் கிடைத்ததும் வடுவூர் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் தட்சிணாமூத்தி மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று செல்லையன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மன்னார்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

  மேலும் இது தொடர்பாக போலீஸ் வழக்குப்பதிவு செய்து செல்லையன் மீது மோதிய பள்ளி வேனை ஒட்டிவந்த டிரைவரை தேடி வருகின்றனர்.

  வடுவூர் அருகே பள்ளி வேன் மோதி விவசாயி பலியான சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

  Next Story
  ×