search icon
என் மலர்tooltip icon

    செய்திகள்

    பெரம்பலூரில் உள்ள அறிவியல் பூங்காவை அரசு பள்ளி மாணவ–மாணவிகள் பார்வையிட்டனர்
    X

    பெரம்பலூரில் உள்ள அறிவியல் பூங்காவை அரசு பள்ளி மாணவ–மாணவிகள் பார்வையிட்டனர்

    பெரம்பலூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை மாணவ, மாணவிகள் பார்வையிட்டனர்.
    பெரம்பலூர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில் அறிவியல் பூங்கா அமைக்கப்பட்டு உள்ளது. இந்த பூங்காவை மாணவ, மாணவிகள் பார்வையிட்டு, தங்களின் தொழில்நுட்ப அறிவை வளர்த்துக்கொள்ளும் பொருட்டு, பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 6 முதல் 9–ம் வகுப்பு வரையுள்ள மாணவ, மாணவிகள் பூங்காவை பார்வையிட உரிய ஏற்பாடுகள் செய்யப்பட்டு உள்ளன.

    அதன்படி, மாவட்டத்தில் உள்ள அரசு, அரசு ஆதிதிராவிடர் நல உயர் மற்றும் மேல் நிலைப்பள்ளிகளை ஒருங்கிணைத்து பூங்காவை பார்வையிடுவதற்கான அட்டவணை தயார் செய்யப்பட்டு உள்ளது. இந்த அட்டவணையில் 4.10.16 (நேற்று முன்தினம்) முதல் 3.3.17 வரையுள்ள அனைத்து வேலை நாட்களிலும் தொடர்புடைய பள்ளிகளில் இருந்து மாணவ, மாணவிகளை அறிவியல் பூங்காவிற்கு அழைத்து வரவும், அறிவியல் பூங்காவில் அமைக்கப்பட்டு உள்ள உபகரணங்கள் குறித்து மாணவ, மாணவிகளுக்கு உரிய விளக்கங்கள் அளிக்கவும் பொறுப்பாசிரியர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர். இந்த பொறுப்பாசிரியர்கள் பூங்காவில் உள்ள அறிவியல் உபகரணங்கள் செயல்படும் விதம் குறித்து விரிவாக மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைப்பார். இதன்மூலம் அரசுப்பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளின் அறிவியல் சார்ந்த அறிவு மேம்பாடு அடைவதுடன், அவர்களின் கல்வியிலும் நல்ல முன்னேற்றம் ஏற்படும்.

    அந்த வகையில் நேற்றுலாடபுரம் அரசு உயர்நிலைப்பள்ளியை சேர்ந்த 100–க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் அறிவியல் பூங்காவிற்கு வருகை தந்து அங்குள்ள உபகரணங்களை ஆர்வத்துடன் பார்வையிட்டு சென்றனர்.
    Next Story
    ×