என் மலர்

  செய்திகள்

  ராஜபாளையத்தில் அரசு பஸ் மோதி தொழிலாளி பலி
  X

  ராஜபாளையத்தில் அரசு பஸ் மோதி தொழிலாளி பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  ராஜபாளையத்தில் அரசு பஸ் மோதி நடைபாதையில் நடந்து சென்ற தொழிலாளி பலியானார்
  ராஜபாளையம்:

  ராஜபாளையம் அழகை நகரைச் சேர்ந்தவர் முருகன் (வயது40), கூலி தொழிலாளி. இவர் சத்திரப்பட்டி சாலையில் நேற்று இரவு 11.30 மணி அளவில் நடந்து சென்றார்.

  அப்போது அந்த வழியே ஆலங்குளத்தில் இருந்து ராஜபாளையத்திறகு அரசு பஸ் வந்தது. அதனை பேரையூரைச் சேர்ந்த சின்னராஜூ என்பவர் ஓட்டி வந்தார்.

  சத்திரப்பட்டி சாலையில் உள்ள தியேட்டர் அருகே வந்தபோது, பஸ் திடீரென ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து வேகமாக சென்றது. அதே வேகத்தில் நடந்து சென்ற முருகன் மீதும் மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட அவர் சம்பவ இடத்திலேயே பலியானார்.

  விபத்து குறித்து ராஜபாளையம் தெற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் பவுல்ஏசுதாஸ் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினார். தொடர்ந்து அரசு பஸ் டிரைவர் சின்ன ராஜூ கைது செய்யப்பட்டார்.

  Next Story
  ×