என் மலர்

  செய்திகள்

  திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னை-ரேணிகுண்டா இடையே சிறப்பு ரெயில்
  X

  திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு சென்னை-ரேணிகுண்டா இடையே சிறப்பு ரெயில்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை சென்டிரல்-ரேணிகுண்டா இடையே பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது.
  சென்னை:

  திருப்பதி பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பயணிகளின் கூட்ட நெரிசலை தவிர்க்க சென்னை சென்டிரல்-ரேணிகுண்டா இடையே பயணிகள் சிறப்பு ரெயில் இயக்கப்பட உள்ளது. அதன் விவரம் வருமாறு:-

  * அரக்கோணம்-ரேணிகுண்டா (வ.எண்.05601) பயணிகள் சிறப்பு ரெயில் நேற்று முதல் வருகிற 12-ந்தேதி வரை (8 சேவைகள்) மதியம் 3 மணிக்கு அரக்கோணத்தில் இருந்து புறப்பட்டு திருத்தணி வழியாக மாலை 5 மணிக்கு ரேணிகுண்டா சென்றடையும்.

  * ரேணிகுண்டா-சென்னை சென்டிரல் (05602) பயணிகள் சிறப்பு ரெயில் இன்று(வியாழக்கிழமை) மாலை 5.35 மணிக்கு ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு திருத்தணி, அரக்கோணம், திருவள்ளூர் வழியாக இரவு 11.25 மணிக்கு சென்னை சென்டிரல் வந்தடையும்.

  * ரேணிகுண்டா-சென்னை கடற்கரை (05604) பயணிகள் சிறப்பு ரெயில் நாளை(7-ந்தேதி) முதல் 12-ந்தேதி வரை(6 சேவைகள்) மாலை 5.35 மணிக்கு ரேணிகுண்டாவில் இருந்து புறப்பட்டு திருத்தணி, அரக்கோணம், திருள்ளூர் வழியாக இரவு 11.25 மணிக்கு சென்னை கடற்கரை வந்தடையும்.

  * சென்னை சென்டிரல்-அரக்கோணம் (05603) பயணிகள் சிறப்பு ரெயில் இன்று(வியாழக்கிழமை) நேரத்துக்கு ஏற்றாற்போல் சென்னை சென்டிரலில் இருந்து புறப்படும்.

  * சென்னை கடற்கரை-அரக்கோணம் (05605) பயணிகள் சிறப்பு ரெயில் நாளை(வெள்ளிக்கிழமை) முதல் 12-ந்தேதி வரையில்(6 சேவைகள்) நேரத்துக்கு ஏற்றாற்போல் சென்னை கடற்கரை ரெயில் நிலையத்தில் இருந்து புறப்படும்.

  மேற்கண்ட தகவல்கள் அனைத்தும் தெற்கு ரெயில்வே வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
  Next Story
  ×