என் மலர்

  செய்திகள்

  கோத்தகிரியில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் மீது வழக்கு
  X

  கோத்தகிரியில் தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த டிரைவர் மீது வழக்கு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோத்தகிரி அருகே தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்த கார் டிரைவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
  கோத்தகிரி

  கோத்தகிரி அருகே உள்ள கட்டபெட்டு அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் ஆனந்தன் (வயது 48), கூலி தொழிலாளி. இவர் நேற்று முன்தினம் மிஷன் காம்பவுண்ட் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக சென்ற கார் ஒன்று ஆனந்தன் மீது மோதுவது போல் சென்றது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் கார் டிரைவர் முருகனை தட்டிகேட்டு உள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த அவர், ஆனந்தனை தகாத வார்த்தைகளால் திட்டி கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

  இந்த சம்பவம் குறித்து கோத்தகிரி போலீசில் ஆனந்தன் புகார் அளித்தார். இதன்பேரில் சப்–இன்ஸ்பெக்டர் ராமச்சந்திரன் வழக்குப்பதிவு செய்து கூலி தொழிலாளிக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக கார் டிரைவர் முருகன் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.
  Next Story
  ×