என் மலர்

  செய்திகள்

  மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியிடம் கஞ்சா பறிமுதல்
  X

  மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியிடம் கஞ்சா பறிமுதல்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  மதுரை மத்திய சிறையில் ஆயுள் தண்டனை கைதியிடம் இருந்து கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர்.

  மதுரை:

  மதுரை காமராஜர்புரம் வடக்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது41). இவர் ஒரு கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

  இந்த நிலையில் மதுரை சிறையில் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள். அப்போது கைதி மணிகண்டன் 50 கிராம் கஞ்சா மறைத்து வைத்திருந்ததை கண்டுபிடித்து அதை பறிமுதல் செய்தனர்.

  இது குறித்து கரிமேடு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து கைதி மணிகண்டனுக்கு கஞ்சா எப்படி கிடைத்தது? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×