என் மலர்

  செய்திகள்

  பிரதமர் நரேந்திர மோடி உருவப்படம் எரிக்க முயற்சி - தமிழக அமைப்பினர் 20 பேர் கைது
  X

  பிரதமர் நரேந்திர மோடி உருவப்படம் எரிக்க முயற்சி - தமிழக அமைப்பினர் 20 பேர் கைது

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  பிரதமர் நரேந்திர மோடி உருவப்படம் எரிக்க முயன்ற தமிழக அமைப்பினர் 20 பேரை போலீசார் கைது செய்தனர்.
  புதுச்சேரி:

  காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தின் உத்தரவுக்கு மத்திய அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. மேலாண்மை வாரியம் அமைக்க காலதாமதமாகும் என்றும் கருத்து தெரிவித்துள்ளது. இதனை கண்டித்தும் உச்ச நீதிமன்ற ஆணையை மதிக்காத பாரதிய ஜனதா அரசை கண்டித்தும் கர்நாடக அரசின் போக்கை கண்டித்தும் இன்று தமிழ் அமைப்புகள் சார்பில் காமராஜர் சிலை சந்திப்பு அருகில் மறியல் நடந்தது.

  போராட்டத்துக்கு தமிழர் தேசிய இயக்க தலைவர் அழகிரி தலைமை தாங்கினார். மக்கள் வாழ்வுரிமை ஜெகநாதன், தமிழர்களம் அழகர், நாம் தமிழர் இயக்கம் செல்வராஜ், தமிழ் தமிழர் இயக்கம் மகேஷ் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

  போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் திடீரென மறைத்து வைத்திருந்த பிரதமர் மோடி உருவப்படத்தை கிழித்து எரிக்க முயன்றனர். போலீசார் அவர்களை தடுத்து கைது செய்தனர். 20 பேர் கைது செய்யப்பட்டனர்.

  இதே கோரிக்கையை வலியுறுத்தி தமிழர் அதிகாரம் என்ற அமைப்பின் சார்பில் காமராஜர் சிலை அருகே மறியல் நடந்தது. போராட்டத்திற்கு ஒருங்கிணைப்பாளர் தமிழன்மீரான் தலைமை தாங்கினார். செயலாளர் கண்ணதாசன், பொருளாளர் கண்ணன் முன்னிலை வகித்தனர். போராட்டத்தில் ஈடுபட்ட 10 பேரை போலீசார் கைது செய்தனர்.
  Next Story
  ×