என் மலர்

  செய்திகள்

  கோலம் போட்ட பெண்ணிடம் முகவரி கேட்பது போல் நடித்து நகை பறிப்பு
  X

  கோலம் போட்ட பெண்ணிடம் முகவரி கேட்பது போல் நடித்து நகை பறிப்பு

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  கோலம் போட்ட பெண்ணிடம் முகவரி கேட்பது போல் நடித்து நகை பறித்த மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

  கோவை:

  வெள்ளலூரை சேர்ந்தவர் மதுசூதனன். இவரது மனைவி குருவம்மாள் (வயது 62). இன்று காலை குருவம்மாள் தனது வீட்டு முன்பு கோலம் போட்டு கொண்டிருந்தார்.

  அப்போது மோட்டார் சைக்கிளில் 2 வாலிபர்கள் வந்தனர். அவர்கள் குருவம்மாளிடம் முகவரி கேட்டனர். பின்னர் குடிக்க தண்ணீர் வேண்டும் என்று கூறினர்.

  உடனே வீட்டுக்கு சென்று தண்ணீர் எடுத்து வர குருவம்மாள் திரும்பினார். இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி 2 வாலிபர்களும் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 3 பவுன் செயினை பறித்தனர்.

  இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் ‘திருடன்.. திருடன்’ என்று சத்தம் போட்டார். ஆனால் அதற்குள் அவர்கள் 2 பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்று விட்டனர்,

  இந்த துணிகர கொள்ளை சம்பவம் பற்றி போத்தனூர் போலீசில் புகார் செய்யப்பட்டது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×