என் மலர்

  செய்திகள்

  பேசின் பிரிட்ஜ் பாலம் விபத்து: தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டினேன் - கைதான டிரைவர் வாக்குமூலம்
  X

  பேசின் பிரிட்ஜ் பாலம் விபத்து: தூக்க கலக்கத்தில் லாரியை ஓட்டினேன் - கைதான டிரைவர் வாக்குமூலம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  தூக்க கலக்கத்தில் லாரியை இயக்கியதே பேசின் பிரிட்ஜ் பாலம் விபத்திற்கு காரணம் என்று கைதான டிரைவர் வாக்குமூலம் அளித்துள்ளார்.
  ராயபுரம்:

  மாதவரத்தில் இருந்து சென்னை துறைமுகம் நோக்கி நேற்று அதிகாலை ஒரு டிப்பர் லாரி சென்றது.

  பேசின் பிரிட்ஜ் மேம்பாலத்தில் வந்த போது திடீரென டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி பாலத்தின் தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு கூவம் ஆற்றில் தலைகுப்புற கவிழந்தது.

  இந்த விபத்தில் லாரி கிளீனர் கொருக்குபேட்டையை சேர்ந்த பிரகாஷ் (18) என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

  இது குறித்து வண்ணாரப்பேட்டை போக்குவரத்து புலனாய்வு பிரிவு இன்ஸ் பெக்டர் செல்லகுமார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார். தப்பியோடிய டிரைவரையும் தேடி வந்தனர்.

  லாரியின் உரிமையாளர் பொன்னேரியை சேர்ந்த சலீம் என்பவரிடம் விசாரித்தனர். அப்போது அவர் வியாசர்பாடி முல்லை நகர் எம்.ஜி.ஆர்.நகர் 5-வது தெருவை சேர்ந்த பார்த்திபன் டிரைவராக பணியாற்றினார் என்று தெரிவித்தார். இதனை தொடர்ந்து பார்த்திபன் வீட்டிற்கு போலீசார் சென்றனர். அப்போது வீட்டில் பதுங்கி இருந்த பார்த்திபனை கைது செய்தனர்.

  பின்னர் போலீசாரிடம் அவர் அளித்த வாக்குமூலம் வருமாறு:-

  நான் மதுரவாயலில் இருந்து சரக்குகளை லாரியில் ஏற்றி அதை மாதவரத்தில் உள்ள குடோனில் இறக்கினேன். பின்னர் சரக்குகளை ஏற்ற சென்னை துறைமுகத்துக்கு சென்று கொண்டு இருந்தேன்.

  தொடர் பணி காரணமாக எனக்கு தூக்கம் வந்தது. இதனையும் பொருட்படுத்தாமல் லாரியை ஓட்டினேன். திடீரென எனது கட்டுப்பாட்டை இழந்த லாரி தாறுமாறாக ஓடி கூவம் ஆற்றில் கவிழ்ந்தது. அதிலிருந்து குதித்து தப்பினேன்.

  கிளீனர் பிரகாஷ் லாரியில் தூங்கிக் கொண்டிருந்ததால் அடியில் சிக்கி உயிரிழந்தார். என்னசெய்வது என்று தெரியாமல் வீட்டிற்கு வந்துவிட்டேன். வீட்டில் இருந்த என்னை போலீசார் பிடித்தனர்.

  இவ்வாறு அவர் கூறினார்.
  Next Story
  ×