என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
செய்திகள்
X
குமரி மாவட்டத்தில் அனுமதியின்றி மது விற்ற 17 பேர் கைது
Byமாலை மலர்3 Oct 2016 1:30 PM GMT (Updated: 3 Oct 2016 1:30 PM GMT)
காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று மதுக்கடைகள் மூடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்த 17 பேரை போலீசார் கைது செய்தனர்.
நாகர்கோவில்:
காந்தி ஜெயந்தியையொட்டி நேற்று மதுக்கடை கள் மூடப்பட்டு இருந்தது. ஆனால் பல்வேறு இடங்களில் அனுமதியின்றி மதுபானங்கள் விற்பனை செய்யப்படுவதாக கிடைத்த தகவலின் அடிப்படையில் போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர்.
கோட்டார் சப்-இன்ஸ் பெக்டர் முத்துமாரி கோட்டார், பீச்ரோடு பகுதியில் அனுமதியின்றி மது விற்றதாக பெருமாள் (வயது 48), செல்லத்துரை (73) ஆகிய இருவரை கைது செய்தார். இவர்களிடம் இருந்து 11 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
திருவட்டார் பகுதியில் மதுவிற்ற சுந்தர்ராஜ் (61) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடமிருந்து 10 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பூதப்பாண்டி சப்-இன்ஸ் பெக்டர் அருளப்பன் தலைமையிலான போலீசார் மறுகால்தலை, கேசவன்புதூர் பகுதியில் ரோந்து சென்றபோது அனுமதியின்றி மதுவிற்ற செல்வமணி, பாக்கியமணி ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
கடையாலுமூடு பகுதியில் அனுமதியின்றி மது விற்ற ஜஸ்டின்ராஜ் என்பவரையும், ஒற்றாமரம் பகுதியில் மதுவிற்ற அணி (27) என்பவரையும், கருமரம் சானல்கரை பகுதியில் மதுவிற்ற ஸ்டீபன் (40) என் பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 36 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
ஊரம்பு பகுதியில் மது விற்ற சுந்தர்ராஜ் என்பவரையும், சாமியார்மடம் பகுதியில் மதுவிற்ற ராஜகுமார் என்பவரையும், நாகர் கோவில் ராமன்புதூர் பகுதியில் மதுவிற்ற கோபா லகிருஷ்ணன் என்பவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 22 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
அருமனை, மாரப்பாடி பகுதியில் மதுவிற்ற டென் சன், ஆரல்வாய்மொழி ஆலடிநகர் ஓடை பகுதியில் மதுவிற்ற முத்துகிருஷ்ணன் ஆகிய இருவரையும் போலீசார் கைது செய்தனர். இவர்களிடம் இருந்து 26 மதுபாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
பணகாலை முக்கு பகுதியில் ஆட்டோவில் மது விற்ற ராஜன் என்பவரை போலீசார் கைது செய்தனர். இவரிடம் இருந்து 11 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. நேசமணி நகர் பகுதியில் மதுவிற்ற மைக்கல்ராஜ், ராஜன், முரளி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

Next Story
×