என் மலர்

  செய்திகள்

  திருத்துறைப்பூண்டி அருகே விவசாயி வீட்டில் தீ விபத்து: ரூ. 2 லட்சம் சேதம்
  X

  திருத்துறைப்பூண்டி அருகே விவசாயி வீட்டில் தீ விபத்து: ரூ. 2 லட்சம் சேதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திருத்துறைப்பூண்டி அருகே விவசாயி வீட்டில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ. 2 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் சேதம் அடைந்தன.

  திருத்துறைப்பூண்டி:

  திருத்துறைப்பூண்டி அருகே உள்ள மருதவனம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ஸ்டாலின்(40). விவசாயி. இவரது வீட்டில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

  இது குறித்து திருத்துறைப்பூண்டி தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுக்கப்பட்டது. நிலைய அலுவலர் சேகர், பொறுப்பு அலுவலர் வீரமணி ஆகியோர் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைத்தனர்.

  ஆனாலும் வீட்டில் வைக்கப்பட்டு இருந்த கிரைண்டர், மிக்சி, மின் விசிறி, கட்டில், பீரோ, பிரிட்ஜ், சான்றிதழ்கள், ரூ. 5 ஆயிரம் ரொக்கப்பணம் ஆகியவை எரிந்து சேதம் அடைந்தது.

  சேத மதிப்பு ரூ. 2 லட்சம் இருக்கும் என கூறப்படுகிறது. மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக தெரிகிறது. இது குறித்து திருத்துறைப்பூண்டி இன்ஸ்பெக்டர் அமுதா ராணி, சப்- இன்ஸ்பெக்டர்கள் காமராஜ், ராஜ்குமார் ஆகியோர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

  Next Story
  ×