என் மலர்
செய்திகள்

திருத்துறைப்பூண்டி அருகே சுவர் இடிந்து விவசாயி பலி
திருத்துறைப்பூண்டி அருகே சுவர் இடிந்து விழுந்ததில் விவசாயி பரிதாபமாக உயிரிழந்தார்.
திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி அருகே உள்ள நெடும்பலம் வடக்கு தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன் (55). விவசாயி.இவர் அண்ணா நகர் ரமேஷ் என்பவர் வீட்டின் பின் புறத்தில் உள்ள சுவரை இடிக்கும் பணியில் ஈடுபட்டு இருந்தார்.
அப்போது எதிர் பாராதவிதமாக சுவர் அவர் மீது இடிந்து விழுந்தது. இதில் பலத்த காயம் அடைந்த ராஜேந்திரனை திருத்துறைப்பூண்டி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.
அங்கு சிகிச்சை பலன் இன்றி இறந்தார். இது குறித்து திருத்துறைப்பூண்டி போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Next Story